ஏன்

என் உறவை
உணர்ந்து கொள்ளாது
உதாசீனம் செய்தது ஏன்?

அன்பை
அனுபவிக்காது அவமதித்து
அலட்சியமாக்கியது ஏன்?


பாசத்தை
பயன்படுத்தாது
பழியாக்கியது என்?

நேசத்தை
சுவாசிக்காது
நாஷமாக்கிது ஏன்?

தேடலை
தேவையாக்காது
பாடலாக்கியது ஏன்?

என் சேர்வை
நேர்வாக்காது
சோர்வாக்கியது ஏன்?

பிரிவை
பிரியமாக்காது
பிரச்சனையாக்கியது ஏன்?

தவறுகளை
கண்டிக்காது
தண்டித்து துண்டித்தது என்?

இயலாமையை
முன்னெச்சரிக்கை செய்யாது
முட்டி விழச் செய்தது ஏன்?

பலயீனத்தை
பயிற்சியளிக்காது
படைதிரட்டியது ஏன்?

குறைகளை
நிறைவுதான் செய்ய முடியாது
மறைவு செய்யாது
திரை செய்தது ஏன்?

கோபத்தை
சுலோபமாக்காது
இலாபமாக்கியது ஏன் ?

ஆசிர்வாத்தை
அனுமதிக்காது
அலட்சியமாக்கியது ஏன்?

சிக்கணத்தை
நற்குணமாக்காது
தலைக்கணமாக்கியது ஏன் ?

செலவீனத்தை
பலயீனமாக பார்க்காது
பாலை வனமாக்கியது ஏன்?

மனசாட்சியை
குனசாடசியாக்காது
நாஷமாக்கியது ஏன்?

ஆறுதலை
அடக்கமாக பார்க்காது
அழிவாக பார்த்தது ஏன்?

ஏக்கத்தை
நோக்கமாக பார்க்காது
தாக்கமாக்கியது ஏன்?

ஆலோசனையை
இலாபமாக்காது
நஷ்டமாக்கியது ஏன்;?

எனக்காக…
சட்டம் போட்டது கிடையாது
திட்டமிட்டது இருக்காது
வட்டமிட்டது கிடையாது
எல்லாம் நமக்காகத்தான் .

உனக்காக…
ஊற்றி ஊற்றி
வளர்த்த மரச் செடியில்
நீ நிழல் தேட வில்லை
ஊழல்தான் தேடினாய்

உனக்காக…
தாங்கித் தாங்கி
சுமை சுமந்த கழுதையில்
நீ கருணை பார்க்க வில்லை
காரணம்தான் தேடினாய்

உனக்காக…
மன்னித்து மன்னித்து
மறந்த தவறில்
நீ மனம் திருந்த வில்லை
மறுபடி செய்து
மனதை விரக்திதான் தந்தாய்.

அதனால்…
எனக்கான தவறு
எங்கு எழுதப்பட்டாலும்
உனக்கான மன்னிப்பு
நான் எழுத வரமாட்டேன்

மறுமைக்காக காத்திருப்பேன்.

கருத்துகள் இல்லை: