உலக வரலாற்றில்
உனக்கென்று இன்னுமொரு வரலாறு...
உருவாக உபதேசத்தை கேள்!
உணர்ச்சிகளின் வீடு
இளைய தலைமுறையே
கல்வியின் பதிமுறையே
நீ காட்டுனக்கு
புரட்சியோ,எழுச்சியோ
எழுந்து வென்றதினை
கல்வியின்றி...
ஏற்பட்டது எங்குமில்லை.
அனுபவமாய் கூறி
உன் மேல் அனுதாப்பட்டவனாய்
அன்பாக கேட்கின்றேன்.
படி! நீ படி!
அறிவில்லா அவலத்தை
நான் சொன்னால்
அட்வைஸா? என்பாய்
அவசியமாய் உணராத நீ
சகோதரியே!
சாட்டு சொல்லி
சாகடிக்காதே கல்வி வயதை
தங்கையே கல்விதான்
தனக்கு கை என
படி! நீ படி!
முகவரில்லா உன்னை
பலர் உன் முகவரி தேடி வருவார்.
கல்வி நீ கற்றால்
படி! நீ படி!
ஆண் பெண்
கருப்பு வெள்ளையென்று
பால் பாகுபாடில்லை
நிற வெறியுமில்லை
பிரிக்க முடியாத ஓர் பதவி
நீ படிக்கும் கல்வி
படி! நீ படி!
இது இல்லாவிடின்
நிச்சயம் பிரிப்பார் உன்னை
சத்தியமாய் கழிப்பார் உன்னை
அதற்காக நீ
படி! நீ படி!
படி படி என்றால்
பந்தயம் போட்டாள் நீ
படிக்க மாட்டேன் என்று
தோல்வி எனக்கில்லை
உனக்கே நாளை...
நிச்சயமாய் சமமாவதில்லை
அறிந்தவரும் அறியாதவரும்
வானத்திற்கும் பூமிக்கிடை தூரம்.
உன்னை தேடி வரும் வரம்
அழித்து விட்டு வாழ்வழிக்காதே!
அதனால் படி நீ படி!
நீ செவி மடுத்திருப்பாய்
சீன் தேசத்தில்
சீர் கல்விருந்தால்
தேசம் விட்டும் தேடென்று
அன்னவர் மொழியாய்.
உன்னை உயர்த்தி
உலகை தாழ்த்தி தரும்
அதுதான் அறிவு.
உன்னை பணித்து
உலகை உயர்த்தி காட்டும்
அதுதான் அறியாமை.
அறிவுக்காக நீ
படி! நீ படி!
பெற்றோரிடம்
மண்ணை கேட்காதே
பொன்னை கேட்காதே
பெருமதியான கல்வி மட்டும் கேள்!
பெற்றிடுவாய் எல்லாம்.
நீ பெண்னென்று
பெயர் சூட்டி உன்னை
கல்விக்கு கட்டு போட்டிடுவார்
கல்லாத மடயர்.
கட்டவிழ்த்து நீ கற்று விடு!
நீ சுற்றும் திசையெல்லாம்
தினம் தினம்
புதிதாய் கிடைக்கும்
ஓர் சொத்து அறிவு.
உன் உள்ளம்
திறந்து தந்திருக்கான்
சிந்தி...நீ சிந்தி
ப+ட்டிட்டு அடைத்திடாதே
அறியாமையால்.
புற்றுக்குள் சென்றாலும்
புதியறிவு கிடைக்கும்
சிந்தி...நீ சிந்தி
அதன் பாதைக்கு முடிவு
உன் மறைவின் பின்னுமல்ல மடிவு
உன் அறிவு வாழ்ந்தாலே
நீயாகத்தான் வாழ்கிறாய்
சிந்தி...நீ சிந்தி
சிந்திப்பவராய் இரு
சிந்திக்க தூண்டுபராய் இரு
முடியாது போனால்
உதவியாக இரு.
நான்காம் மனிதனாக நடமாடாதே!
நீ எதை இழந்தாலும்
அனாதையுமில்லை,ஆதரவற்றவருமில்லை
அறிவை இழந்தால்தான்
அனாதை நீ .
உன்னை பாதுகாக்கும்
பெற்றோரை பொய்யாக்காதே
சிந்தி...நீ சிந்தி
கணணி உலகை கற்றுப் படி
வெப் வேல்டை வெற்றியாய் படி
நீயே யார் என்று நீ அறிவாய்
இப்போது நீ யர் என்று
உனக்கே தெரியாது.
அதனால் நீ படி!
நான் அறியாத பாவி
என் அறிவுக்கு சாவி
என்னையாக்கு சீதேவி
அதற்காக படி நீ படி
நீ அடுப்புக்கும்
பாத்திரத்திற்கும் மட்டும்
சொந்தக்காரியல்ல
கல்வியில் செல்வந்த காரி
எனக் காட்டு!
நீ இன்று படி
உன்னை உலகம்
படிக்கும் நாளை...
காமத்திலும்
கலாசாரத்திலும்
பெண்ணுரிமை கேட்டு
கலவரம் செய்யும் பேய்களுக்கு
கல்வி கற்று
இதுவே பெறியதோர்
உரிமையென்று நீட்டு...
சகோதரியே!
ஆண் படித்தால்
ஆளுமை வெள்ளும்
பெண் நீ படித்தால்
அதனுடன்; பெருமையும் கொள்ளும்
வறுமையும் சில நேரம் வற்றிவிடும்
அதற்காக படி! நீ படி!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக