ஒரு நாள் புரிவாய்

நீ இப்போது
புரிவாயோ ! இல்லையோ!
ஒரு நாள் புரிவாய்
நிச்சயம் புரிவாய்.

நான் உன்னை
நேசித்தது போல்
நீயும்
ஒர் அன்பை நேசித்து
வேஷிக்கப்படும் போது

அப்போது
நீ என்னை புரிவாய்.

நீ இப்போது
அன்பை தருவாயோ! இல்லையோ!
நிச்சயம் ஒரு நாள்
என் அன்பு தாகத்தில்
நீ வருவாய்.
நான் உன்னை
அன்பை பிச்சை கேட்டு
அவமானப்பட்டது போல்
நீயும்
ஓர் அன்பை கேட்டு
அவமானப்படும் போது
என் தாகத்தை
நீ உணர்வாய்.

நீ இப்போது
என் வேதனை அறிவாயோ இல்லையோ!
ஒரு நாள் அறிவாய்
நான் உன்னால் அலட்சியப்பட்டு
அங்கலாய்ப்பது போல்
நீயும் ஒரு அன்பில்;
அலட்சியப்படும் போது
என் வேதனை
நீ நிச்சயம் அறிவாய்

நீ இப்போது
உன் பிடிவாதத்தை
விடுவாயோ! இல்லையோ!
ஒரு நிச்சயம் விடுவாய்
நான் உன் அன்புக்காக
உடன்பட உடன்பட
நீ முரண்படுவது போல்
நீயும் ஒரு அன்பில்
உடன்பட்டு முரண்டுகிறபோது
என் உடன்பாட்டை
உதரிதள்ளிவிட்டு போனதை
சிந்திப்பாய்.

நான் உன்னை
நேசிப்பது போல்
நீ என்னை நேசிக்கவில்லை
நான் உன்னை தேடியது போல்
நீ என்னை தேடவில்லை
நான் உன்னை நம்பியது போல்
நீ என்னை நம்பவில்லை
நான் உன்னை தாங்கியது போல்
நீ என்னை தாங்க வில்லை
இத்தனை நான் தெரிந்தும்
உன்னை நேசித்த நான்
மடயன் என்பதை
பலர் சொல்வது போல்
உன்னை சொல்ல
ஒரு நாள்
வரக் கூடாது மனிதா!

அதற்காக …
கொஞ்சமாவது சிந்தி…
பிறரின் வேதனையை
உன்னைப் போல்
நானும் மனிதன்தான்
உன்னால் எப்படி
தோல்வியை தாங்க முடியாதோ
அதற்கு நான் விதிவிலக்கல்ல
உன்னால் எப்படி பாசம்
பயனற்று போவதை ஏற்க முடியாதோ
அதற்கு நான் விதிவிலக்கல்ல
உன்னை எப்படி
மற்றவர் புரிய மறுக்கின்ற நேரம்
உன் கவளை எப்படி இருக்கிறதோ
அதற்கு நான் விதிவிலக்கல்ல
நாம் மற்றவரை புரியும் போதுதான்
மற்றவரும் எம்மை புரிவார்கள்.

கருத்துகள் இல்லை: