நட்பு

மிக அண்மையில்
முளைத்த ஓர் நட்பு
மூளையை தகர்க்கும் வரை
உள்ளத்தை தொலைத்து
துணை தந்தது...

போகும் நீ போ...

அன்பை கொஞ்சம்
நீ தந்தாய்...
அதில் அதிகம்
நான் நனைந்தேன்.

அதை அதிகம்
நான் தரவே
தகர்த்து விட்டு போறாய்.
தாகித்தழுகின்ற இதயத்தை...

பிடிக்காத உறவை பிரிக்க
சிலர் சொல்வார்கள்.

தண்டிக்க துண்டிப்பதை

தண்டிக்க துண்டிப்பதை
பயன்படுத்தி விட்டீர்கள்

மனம் சுமக்கும்
பாரத்தை இறக்கிட
வரிகள்தான் வந்தன.

ஏன்

என் உறவை
உணர்ந்து கொள்ளாது
உதாசீனம் செய்தது ஏன்?

அன்பை
அனுபவிக்காது அவமதித்து
அலட்சியமாக்கியது ஏன்?