மன்னித்து விடுங்கள்
சொல்லக் கூடாதவைகளை
சொல்லி விட்ட என்னை
மன்னித்து விடுங்கள்.
சொல்ல வைத்த உங்களை
நான் மறந்து விடுகிறேன்.
சொல்லவும் முடிய வில்லை
சொல்லாமல் இருக்கவும் முடியவில்லை
வேறு வழியில்லாமல் சொல்கிறேன்.
நம்புங்கள்
நம்புங்கள் என்று
நரம்பு தெரிக்க
அழுதவர்கள் அன்று…
இன்று…
ஏன் என்னை நம்பினீர்;
என்றால்
நான் என்ன சொல்வேன்.
வேடிக்கையா?
இல்லை வியாபாரமா?
இவர்கள் நாடகம்.
நரம்பில்லா நாவாகருப்பதால்
நல்லது பேசத்தான் தெரியாது
இவர்களுக்கு…
நாணயம் கூட இல்லைதானா?
அன்பு என்றால்
என்ன என்று தெரியாது
அறிவிலியாகத்தான் அலைந்தார்கள்
நாங்கள்தான் அறிமுகம் செய்தோம்.
நட்பு என்றால்
என்ன என்றும் தெரியாது
நடைப்பினமாகத்தான் நடந்தார்கள்
நன்றியுடன் நாங்களே நம்பினோம்
ஆதரவு என்றால்
என்ன என்று அறியாது
அமைதியாகவே அழுது புலம்பினார்கள்
ஆறுதலுடன் நாங்களே கண் தொடைத்தோம்
குசநைனெ ளாip என்றால்
என்ன என்று பிரித்தறியாது
பின்வாங்கியே நின்றார்கள்
பிரியத்தை நாங்களே ஏற்படுத்தினோம்.
அன்புக்காக…
அதுவும் செய்தோம்
எதுவும் செய்வோம்
ஆனால் நாமே
இன்று அனாதையாகிப்போனோம்.
அவர்களுக்காக…
கஷ்ட்டப்பட்ட போதெல்லாம்
கைமாறு என்ன செய்வேன்
என்றார்கள்…
அப்போதெல்லாம் தெரிய வில்லையோ!
நான் இவர்களுடன்
இஷ்டமாக இருப்பது.
இதுதான் அவர்கள்
கேட்ட கைமாறோ!
அவர்களுக்காக…
கஷ்ட்டத்தையும்
நஷ்ட்டமாக பார்க்காது
இஷ்டமாக தாங்கினோமே
அப்போதெல்லாம் புரியவில்லையோ
நான் அவர்களுடன்
அன்பாக இருப்பது
ஆனால்
இப்பொது கேட்பீர்கள்
அன்புடன்தானா ?
இதையெல்லாம் செய்தீர் என்று.
தேவை தேவையற்று போனால்
தேவையற்று போவோம்
என்று
கற்பணைக கூட
கல்பில் இருக்க வில்லை
நமது அன்பு கூட
தேவையற்றுப் போச்சு என்று
தெளிவாக சொல்லி விட்டார்கள்.
தேவை முடிந்தால்
தேவையற்று போகும் உலகில்
மனிதன்தான் தேவையற்று போவான்
மனித அன்பு கூட
தேவையற்று போகும் என்பதை
நான் உன்னில்தான்.
உணர்ந்து கொண்டேன்.
இவ்வாறு பேசும்
உன் வளர்ச்ச்pயை
குற்றம் சொல்லி அர்த்தமில்லை
வளர்த்து விட்ட
நாமே குற்றமாகிப்போனாம்.
நீங்கள் எழற்சி பெற்றீர்
நாங்கள் வீழ்ச்சி பெற்றோம்.
நன்றி…
நன்றி…
நான் எப்படி சொல்வது?
எந்த வார்த்தையில் சொல்வது?
நடிப்பு வாhத்தைகள்
எனக்கு தெரியாதே!
எனக்கு தெரிந்த
வார்த்தையில் வாழ்த்துகிறேன்.
நன்றாக இருங்கள்.
நானில்லாதவர்களுடனாவது.
ஆனால்
இன்னுமொன்று என்;னை
இழிவாக சொல்கிறேன்.
எல்லோரும் என்னைப் போல்
இழித்த வாயர்களல்ல.
அதற்காக…
பிறர் நம்ப நடங்கள்
பிறரை நம்பி நடங்கள்
நபிவழியாக வெற்றி நிச்சயம்.
நாளை கைசேதப்படக் கூடாது
என்பதற்காய் என் இறுதியுரை
மன்னிக்கனும்
மறந்திடனும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக