நீ வெயிலில் தேடி அலைகிறாhய்
உன் நிழலை விட்டு
இன்னுமொரு நிழலை .
அந்த நாளை நோக்கி...
உன் மரணத்தை
மனதில் வைத்து பார்!
அதன் நிறை எவ்வளவென்று?
நீ யார் என உணர்வாய்.
அந்த நாளை நோக்கி...
வாழ்கின்ற நீ
வழிப் போக்கனைப் போல் வாழ்!
நடமாடுகின்ற நீ
நடோடியைப் போல் வாழ்!
நீ வாழும்
உலகம ; இதுவல்ல
அது தூரத்திலுமல்ல
அருகாமையிலுமல்ல
நடுவில்தான் இருக்கும்.
அதிகாரத்தால்,ஆட்சியால்
கர்வத்தால்
நீ சாதித்தது என்ன?
உன் மனதை
சீர் படுத்து
நடத்தையில் நம்பிக்கையூட்டு.
நீயாக சிந்தி
மற்றவரின் துன்பத்தை.
கவளைக்கு கை கொடு!
கண்ணீருக்கு கை குட்டை கொடு
உன் ஆதரவை.
இதுவே நீ
மறு வாழ்வுக்குச் செல்லும்
மனித நேயப் பாதை.
தூங்கும் எனக்கும் உனக்கும்
விழிப்பது உறுதியில்லை
ஏன் ஒருவருக்கும் நிச்சயமல்ல.
வாழ்ந்த ஏழைதான் எங்கே?
செல்லவந்தர்தான் எங்கே?
கோலைதான் எங்கே?
வீரண்தான் எங்கே?
நாளை எனது பெயர்
உனது பெயர்
மரணம் என்றுதான்.
வெறுப்பாக வாழ்ந்தாலும்
பொறுப்புணர்ச்சியுடன் வாழ்
மறுப்போர் யாருமில்லை.
நெருப்பாக வாழ்ந்தாலும்
மற்றவரின் உன்னில்
குளிர் காய வாழ்!
நீ மட்டும் வாழ்வது
வாழ்வே அல்ல
பிறரும் உன்னால்
வாழ்ந்தாலே வாழ்வு!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக