உன்னை நேசிப்பதற்கும்
வேசிப்பதற்கும்
எனக்கு உரிமை இருக்க
ஏசிப்பார்ப்பதற்கு எனக்கு தகுதியில்லை.
வா என்று
அழைக்க உரிமை இருக்க
வரவேண்டும் என்று
கட்டளையிட. எனக்கு தகுதியில்லை.
எடு என்று
சொல்ல உரிமை இருக்க
எடுக்க வேண்டாம் என்று
நிட்பந்திக்க எனக்கு தகுதியில்லை.
உன் பாசத்தை சுமந்த
பாவி நான் பாவம்
வேதனையை சுமக்க வேண்டிதாயிற்று.
உன் வாhத்தையை
நம்பிய நடிகன் நான்
நாஷமாக வேண்டியதாயிற்று.
யாரிடம் உரிமை கேட்க
மனித உரிமையே உணர்வற்றிருக்க
ஐ நா பெற்று தரவா போகிறது.
நானாக நினைத்து
உரிமை பேசிய மடமையை
மற்றவர் என்ன செய்வார்?
என் நிட்பந்தத்திற்கு மட்டுமல்ல…
நியாயத்திற்கும் மதிப்பில்லை.
என் அன்புக்கு மட்டுமல்ல…
ஆனந்தத்திற்கும் அருகதை இல்லை
என் கோபத்திற்கு மட்டுமல்ல…
இரக்கதத்pற்கும் இதயமில்லை.
என் வேதனைக்கு மட்டுமல்ல்
வேண்டுதலுக்கும் தயவில்லை
என் விளைவுக்கு மட்டுமல்ல
விட்டு கொடுப்புக்கும் விலை இல்லை.
என் நட்புக்கு மட்டுமல்ல
சகோதரத்திற்கும் சாட்சி இல்லை.
யார் யாரை கஷ்டப்படுத்தினாலும்
யார் யாரை வெட்டினாலும்
யார் யாரை நிட்பந்தித்தாலும்
நான் இதில் இல்லை…
புரிதலால் புரிந்து கொண்டால்
பூமியில் எதையும்
விட்டு கொடுப்பேன்.
யார் யாரை எங்கு வைக்கனுமோ
அவர்கள் அங்குதான்
என்னை வைத்தார்கள்.
நானோ எங்கும் வைத்து
ரசித்து அழகு பார்த்தது
என் முட்டால் தனமா?
இரத்தம் சிந்தி…
இரக்கம் சுமந்தாலும்
இழிவைத்தவிர இது வரை
சுமக்க வில்லை.
ரோஜா முற்களை
அகற்ற முடியும்
ரோஜாவை பரிக்கும்
தகுதி எனக்கில்லையோ!
மரத்திற்கு நீர் ஊற்றி
பார்க்க முடியும்
மலர் வாசத்தை சுவாசிக்கும்
தகுதி எனக்கில்லையோ!
மலரட்டும்
மாறட்டும்
மாறுதல் மண்ணில் மட்டும்
மண்ணறைக்குப்பின்…
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக