கிராமத்து இதயங்கள்.

என் கிராமம் இல்லையேல்
எப்போதே பூமி
வறன்டு போயிருக்கும்.

சிறகு விரித்த பறவைகளும்
விடியலை
செய்தி சொல்லும்
என் கிராமத்து
இதயங்களுக்கு...


ஒரு தாய்
குழந்தையை உறங்க வைக்கும்
சங்கீத தலாட்டு
என் கிராமத்து இதயத்தில்
இன்னும் இதமாகவே இருக்கிறது.

என் கிராமத்தில்
ஆணவம் வெள்வதில்லை
அகங்காரம் நில்வதில்லை
மக்கள் சார்புள்ளவர்களே வெள்வார்கள்.

என் கிராமத்து
சோலையில்
பச்சை நிறைந்திருக்கும்
பச்சோந்திகள்
நிறைவில்லை

மாலை மறைவில்
என் கிராமத்து இதயத்தில்
இறைகீதங்கள் ஒளிக்கும்
பட்டனத்திலின்று
பாட்டுகளே சலிக்கிறது.

மழைவெள்ளத்தில்
தலாட்டும் தவளைக்கீதம்
கிராமத்து இதயத்தில்
இசையாக இசைவாக்கமாச்சு
பட்டனத்தில்
பதவி புகலோடு வாழ்வதைவிட
என் கிராமத்து
இதயங்களோடு வாழ்வதில்தான்
பதவிகள் என்னை தேடிவரும்

கருத்துகள் இல்லை: