சமாதானம் 2

சமாதானம்
சாதரணமல்ல
அது சம தானம்.

உனக்கு இழப்புமில்லை
எனக்கு இழிவுமில்லை.


விட்டு கொடுப்பால்
விளைக்கின்ற ஓர் கதிர்.
நாளை விடப் போகிறது
பல பயிர்.

உயிரை பறித்து
உணவை மறித்து
உலகம் பேசும் சத்தமா?
இன்றைய சமாதானம்.

வென்புறா சிறகுடைத்து
இறகாக்கி சக்கடையில்
எரிந்து விட்டு
சமாதான சட்டம் எதற்காக?

அலுவலகம் அமைத்து
அதிகாரி நியமித்து
அபிப்பிராயம் அழிக்கப்படுகின்ற
அரசியலா இன்றைய சமாதானம்.?

உடன் பாட்டுக்குள்
ஒன்றுபடுவதே சமாதானம்
பிளவுக்கிடையில் சம்மதிப்பதே சமாதானம்.

நட்பு நாடும் தேவையில்லை
மூன்றாம் நான்காம் நபரும் தேவையில்லை.
நாமே போதும்
என்பதே சமாதானம்.

உண்மைப் பேசி
உரிமையை கொடுப்பதையே
உலகம் எங்கும் ஏங்கிறது
உலக சமாதானம்.

அனுசரித்து நட
அதுவே சமாதானத்தின் அடித்தளம்.
ஆணவமாய் அரைகூவி
அறிக்கை விடும் சமாதானம்
சண்டைக்கே சகுனம்.

பற்றுருதி கொள்
பாதிப்பதில் பிறரும் விரும்பாதே!
அதுவே சமாதானம்.
உலகிற்கு இதுவே போதுமான சம தானம.;

கருத்துகள் இல்லை: