வயிற்று பசி...

நவீன நகரீகம்
நாட்டுக்கு நாடாய் வளர்கிறது
ஆனாலும்
எங்கள் வயிற்றுப் பசி
அனாகரீமாத்தான் இருக்கிறது.


எங்கள் வீட்டுக்குள்
நெருப்பெரிந்தால் அது அதிஷயம்
எங்கள் வயிறு
ஒரு நேரம் எரியாதிருந்தால்
அதைவிட அதிஷயம்.

கை நீட்டி பசி போக்க
இதுவரை பழகவில்லை
பழகிப்போச்சு பட்டினிருந்து

அம்மா என்றழும் குழந்தைக்கு
தண்ணீர் பருக வைத்து
படுக்க வைத்த தாய்
பாலுட்டஅவளிலும் ஏதுமில்லை.

தாய் தாலாட்டே
எங்களுக்கு உணவு...

நீங்கள் நினைக்கலாம்
தாலாட்டால் பசி தீராதென்று
ஆனாலும் எங்களுக்கு
பாசம் எல்லாவற்றையும் தீர்க்கிறது.

நாம் இன்று
பசியால் தவிப்பது போல்
பாசமில்லாது ஒரு நாளை
தவிப்பீர்கள்.
பார்க்க நாமில்லா விட்டாலும்
நாட்டில் வரலாறு இருக்கும்.