எது சமாதானம்? 1

வான் வெளிச்சத்தில்
அன்பின் வடிவங்களாய்
மின்னுகின்ற நட்பின்
விரிசலை சரி செய்வது
சமாதானமா?

உறவின் தொடர்
கணவன் மனைவிக்குள்
கண்ணிமைக்ககும் கடமைகள்
மீறும் நேரம்
சமன் செய்வது
சமாதானமா?

உறவுக்குள் உருவாகும்
முரண்பாட்டை
புரிதலால் புனைவது
சமாதானமா?

சமூகத்தில்
சண்டைத்தீ
சவாலையிடும் நேரம்
அமைதி பேசி அணைப்பது
சமாதானமா?

யுத்தத்தினை
அணு சக்தியால்
வெல்லுவதில் சாமாதானமா?
அணுகு சகத்தியால்
வெல்வதில் சமாதானமா?

வரிகள் எத்தனை எழுந்தாலும்
மான்ட உயிர்கள்
மீண்டு எழுவதில்லை.

சோகங்களின் சரிதை
சாகும் வரை
சமாதானம் தேடி
அழுது கொண்டே வாழும்.

மிளிரட்டும்
மின் குமிழாய் சமாதானம்
என் தாய் நாட்டில்
குளிரட்டும்
பணி பாரைகளாய் சமாதானம்
என் சமூக உள்ளத்தில்.
ஊராகி உலகமயமாகட்டும்.

கருத்துகள் இல்லை: