நீ அடிபட்டால் எனக்கென்ன?
அது நான் நினைத்தால்
சுயநலம்
நீ தொடர்ந்தால்
சுய உரிமை
என்கின்ற ஒரு கூட்டம்.
ரசித்து பழகி
ருசித்து பணிந்து
கருணை முரசி ஒட்டினாலும்
கடைசி கதவடைப்பே!
பிரிவின் சுவரை
சூஷகமாக சுட்டினாலும்
பகிரங்கமாகிறது
பகிஸ்கரிப்பின் பலிவாங்கல்கள்
வழக்கம் போல்
வாழ்க்கையின் தேடல்
தெளிவற்று பேச்சு
நாம் தேவையற்று போக.
நான் நாமென்று போக
நானென்று ஓடினார்கள்.
நான் நானென்று போக
நாமென்று வருகிறார்கள்.
பாதிப்பு பகிரங்கமாகிறது
பாசம் மட்டும்
இரகசியமாக யாரையோ
நோக்கி இயங்குகிறது.
நான் எப்படிருந்தால்
என்னையும் இவர்கள்
நேசிப்பார்களோ என்றால்
கொஞ்சமாவது யோசிக்கலாம்.
அலறித் துடித்து
நான் அனாதையாவதை இவர்கள்
ஆனந்தக் கண்ணீராய் எதிர்பார்க்கிறார்கள்.
படுகாயமுற்று
பாதிப்பை பகிர்ந்தாலும்
பார்த்து விட்டு
பார்க்காதவாறு பழிப்பார்களே தவிர
பாசமாக ஒரு அறுதல் இருக்காது.
அத்து மீறல்களுக்கும்
அளவிருக்கும்
இவர்களின் அவமதிப்புக்கு
முதல் தொடக்கம்
தொடர்கிறத இன்றும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக