மௌனத்தின் சத்தங்கள்
யுத்தமாகிடுமோ!
யதார்த்தமாக எழுதம்
உன்னுடன்
வெற்றியாகிடுமோ!
வெற்றிடமாகிடுமோ!
நம் உறவுக்குள்
வஞ்சகம் வளர்ந்திடாது
பிரிவு சேர்ந்திடாது
வளரட்டும் வாழட்டும்!
உதட்டின் உணர்வை
உன்னுடன் பேச
அனுமபதிப்பாயோ!
அறுவறுப்பாயோ!
மன்னிக்னும்
நீ சொல்!
ஓர் கனவின் நினைவில்
நான் யார்?
நீ யார் என்று
நாமே கேட்டால்
வினாவுக்கு விடை
நீ பகிர்ந்தால்
பாதிக்காது நிச்சயம்.
சம்மதமோ
சற்று தூரமோ
சத்தமாக சொல்
சந்திக்கும் சந்தர்ப்பத்தில்
யாரும் பாதிக்காதிருக்க.
உமக்கான உறவு
நெருக்கமான நிமிடத்தில்
சற்று தூரமாகிறது
சந்திக்க தூரமானபோது
மிக நெருங்கிய
சத்தம் எழுகிறது.
என் நினைவை
நீ வைத்தாலும்
உன் நினைவை
நான் வைத்தாலும்
நமக்கான உறவு
ஏதோ ஓர்
பக்கத்தில் இருக்குமா?
அல்லது பக்தில் எல்லாம்
நாமாகத்தான் இருக்குமா?
நீயே சொல்!
நமக்கான பக்கங்கள்
எப்போதும் புதிதுதான்
புதியொரு சுகம்தான்
அன்புக்கு ஏங்கினால்
அது எவாக இருக்கும்
நீ சொல்!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக