தண்டிக்க துண்டிப்பதை
பயன்படுத்தி விட்டீர்கள்
மனம் சுமக்கும்
பாரத்தை இறக்கிட
வரிகள்தான் வந்தன.
உலகம் என்னை சுற்றி
இன்றுருப்பவர்
நாளை யாருமில்லை
வளர்ச்சிகள் போட்ட தடையோ?
புதியவராய் வந்தவர்கள் கேட்ட இடையே?
முந்தியடித்ததுக் கொண்டு
நாட்புக்காக...
காத்திருந்தோம்
கடைசி வரை
நிந்திக்கப்பட்டு
பின் தள்ளப்பட்டோம்.
திசை மாறி வீசுகின்ற
ஒவ்வொரு நிமிடத்திலும்
ஒதுக்கப்பட
நாமே அங்கு தெரிவாகிருப்பாம்.
துடித்த ஒவ்வொரு உணர்வையும்
உண்மையில் செயலித்தோம்
அதனாலோ சொத்து மடிகிறோம்?
எப்போ முற்றத்து மல்லிகை
வீட்டானுக்கு மனம் வீசியது
அண்டை வீட்டுக்கே மூக்கேறியது
கணங்கள் நகர்வதில்
ஏதோ ஓர் பாதிப்பில்
நம்மையே பலியெடுப்பார்கள்.
வழித்தெழும் காலை
நாம் தேடுவது தண்ணீர் துளி
இவர்கள் கண்ணீர்தான்
கை நீட்டிக் கொடுப்பார்கள்.
ஆதியிலிருந்து தொடரும்
அவமதிப்பு
அவாடு கொடுப்பது போல்
அவர்களுக்காகிருக்கிறது.
எப்போதும் விரட்டியடிக்கும்
சொற்களே அவர்கள் வாயிலிருக்கும்
காலுக்கடியில் போட்டு மிதிக்கும்
அகங்காரங்களே அவர்கள் செயலிருக்கும்.
வருத்தம் கடந்த உடலுக்கு
என்றாவது ஆறுதலாவது கூறியிருப்பார்களோ?
சந்தோஷத்தை மட்டும்
விதைத்த நாம்
சாக்கடையாகிப்போனோம்.
உலகம் எவ்வளவு பெரிதிருந்தும்
நட்பாசைகள் நிரம்பிய உள்ளம்
அவர்களை தேடித் தேடிச் சென்றே
தெருவில் நின்று தவிக்கிறது.
தூய அருவி ஒன்றில்
தாகம் தீர்க்க கை ஏந்திருக்க
தூர நின்று கல்லெறிந்து
கலங்படுத்துவது அவர்களுக்கு
சுகமானது ...
கலங்கிய அருவியில்
திரும்பத் திரும்ப இறங்கி
கலக்கம் நீக்க நினைத்தாலும்
கலங்கப்படுத்துவதில்தான்
இன்றும் அவர்களுக்கு சுகமிருக்கிறது.
அவர்களது காலடியில்தான்
எங்கள் நட்புச் சுவர் புதைந்து போனது
அவர்களது புன்னகையில்தான்
எங்கள் தோழமை தோற்றுப் போனது
எல்லா வாசல்களையும்
அடைத்து விட்டு அவர்கள்
வாழ்வில் சந்தோஷிக்கிறார்கள்.
அதுதான் தேவை
எங்கிரந்தாலும் அவர்கள் நன்றாக இருக்கட்டும்
கருணையில் கூட
கண்ணீர் சிந்தாத கண்களில்
வேதனையில் ஊற்றெடுத்த
ஒவ்வொரு கண்ணீர் துளிக்கும்
பதில் நீங்தான் சொல்லனும்.
காரணங்கள் இல்லாமலோ
சொல்லாமலோ
துடிக்கத் துடிக்க
தூரம் சென்று விட்டீர்.
துன்பத்தை சுமந்து
இன்னும் என்றும் எங்கி தவிக்கிறோம்
என்ன செய்தோமென்று.
மறுமை என்ற ஒன்று
இல்லாமல் இருந்திருந்தால்
மனம் மௌனியாகிருக்காது
மரணத்தை தேடிச் சென்றிருக்கும்
மன்னித்திடுங்கள்
செய்யாத தவறுக்காக
தண்டிக்க துண்டிப்பதை
பயன்படுத்தி விட்டீர்கள்.
துண்டிப்பதையே விரும்பும் நீங்கள்
தொடரும் போதே சொல்லிருக்கலாமல்ல.
மாலை காலை என்றலைந்த
நேரங்கள் உங்களை நெருங்கிருக்காது
அவை உங்களுக்கு
அரட்டையாகத்தான் இருந்திருக்கும்
பாசம் நேசம் என்ற
உணர்வு உருவாகிருக்காது
அது உங்களுக்கு
வேஷமாகத்தானே இருந்திருக்கும்
சரி பிரிவை நேசிப்பதை
தெளிவாக சொல்லிருக்கலாம்தானே
திணிவு செய்ய வேண்டி
தேவை என்னாச்சு?
சரிதான்
எல்லாம் சரி
என்றும் சொல்லாமல்
செய்து கொண்டுதான் இருந்தீர்கள்
நாங்களே உணராது போனதை
உங்களை தவறோ தப்போ சொல்வதில்
தப்பிக்க முடியாதுதான்
இவை அறியாமைக் கொள்கை
கொடூரம் தவிர வேறில்லை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக